The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe City [Al-Balad] - Tamil Translation - Omar Sharif - Abridged Version
Surah The City [Al-Balad] Ayah 20 Location Maccah Number 90
இந்த (மக்கா) நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
நீர் இந்நகரத்தில் (எதிரிகளைத் தண்டிக்க) அனுமதிக்கப்பட்டவர்.
தந்தையின் மீதும், அவர் பெற்றெடுத்ததின் மீதும் சத்தியமாக!
திட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம்.
தன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா?
அதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று கூறுகிறான்.
அவனை ஒருவனும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?
இரு கண்களை அவனுக்கு நாம் ஆக்கவில்லையா?
ஒரு நாவையும், இரு உதடுகளையும் (அவனுக்கு நாம் ஆக்கவில்லையா)?
இன்னும் இரு பாதைகளை அவனுக்கு வழிகாட்டினோம்.
அவன் ‘அகபா’வைக் கடக்கவில்லை.
நபியே!) “அகபா” என்றால் என்ன வென்று உமக்கு அறிவித்தது எது?
(அது,) ஓர் அடிமையை விடுதலை செய்தல்,
அல்லது, கடுமையான பசியுடைய நாளில் உணவளித்தல்,
(யாருக்கு என்றால்) உறவினரான ஓர் அனாதைக்கு,
அல்லது, மிக வறியவரான ஓர் ஏழைக்கு உணவளித்தல் (அகபாவை கடப்பதாகும்).
பிறகு, நம்பிக்கையைக் கொண்டவர் களிலும், பொறுமையைக் கொண்டும் உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டும் உபதேசித்துக் கொண்டவர்களிலும் அவர் ஆகிவிட வேண்டும்.
இவர்கள் வலப்பக்கமுடையவர்கள் (சொர்க்க வாசிகள்).
நம் வசனங்களை நிராகரித்தவர்கள்தான் இடப்பக்கமுடையவர்கள் (அவர்கள் நரகவாசிகள்)
(அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டப்பின் அந்)நரகம் அவர்கள் மீது மூடப்படும்.

